இந்தியா

மேற்கு வங்கத்தை கைப்பற்ற குஜராத்தை இழக்க வேண்டும் – மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரும் என்ற பாஜக தலைவர்களின் கூற்றை முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று மதியம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்ககோனில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) எதிர்ப்புப் பேரணியில் மம்தா உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நான் ஒன்றைக் கணிக்கிறேன். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக தோற்கப் போகிறது. வங்காளத்தை வெல்ல அவர்கள் குஜராத்தில் தோற்க நேரிடும்” என்று தெரிவித்தார்.

மேலும் SIR பணிகள் குறித்து பேசிய அவர், “SIR ஏன் இவ்வளவு அவசரமாக செயல்படுத்தப்படுகிறது? தேர்தலுக்கு முன்பு யாரால் அதை முடிக்க வேண்டும்? இது மூன்று ஆண்டுகள் எடுத்து மெதுவாக செய்யப்பட்டால் என்ன பிரச்சனை? இவ்வளவு காலமாக சட்டவிரோத குடியேறிகள் இருந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு?

எல்லையைப் பாதுகாப்பதற்கு யார் பொறுப்பு? விமான நிலையங்கள் மற்றும் சுங்கச்சாவடிகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தேர்தல் ஆணையம் இப்போது ஒரு பாஜக ஆணையம் ஆகிவிட்டது. முறையான பயிற்சி கூட பெறாமல் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் பி.எல்.ஓ.க்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்