இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.

ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் மூன்று அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.

இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டைப் புறக்கணித்துள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி அதில் தைரியமாக பங்கேற்கிறார் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் இல் பதிவிட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “அடுத்த ஜி-20 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறும், அந்த நேரத்தில், இந்தியா அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம்.

ஆனால், கடந்த ஏழு மாதங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 61 முறை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்திவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.

அடுத்த 12 மாதங்களில் அவர் இன்னும் எத்தனை முறை அதை மீண்டும் மீண்டும் சொல்ல முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த உச்சிமாநாட்டிற்குள் மோடி தனது நல்ல நண்பருடனான இராஜதந்திர அரவணைப்பை மீண்டும் தொடங்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்
இந்தியா

இந்தியாவுக்கு சிந்து பகுதி சொந்தமாகலாம்: ராஜ்நாத் சிங்

தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பல ஆண்டுகளாக நமது அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் அவதிப்பட்டு