விளையாட்டு

தாமதமாக டிக்ளேர் செய்ததற்கான காரணத்தை போட்டுடைந்த தென் ஆபிரிக்க அணி பயிற்சியாளர்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனையடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தது. தென் ஆப்பிரிக்கா அணி மொத்தம் 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 94 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 549 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. சுதர்சன் 2 ரன்களுடனும், குல்தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய சூழலில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தாமதமாக டிக்ளேர் செய்தது எதனால் என தென் ஆபிரிக்க அணி பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் காரணத்தை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, இந்திய வீரர்கள் மைதானத்தில் அதிக நேரம் ஃபீல்டிங் செய்து விரக்தியில் தவிக்க வேண்டும் என்று நினைத்தோம்.

அவர்களை வெற்றி வாய்ப்பிலிருந்து முற்றிலும் வெளியேற்றும் வரை நாங்கள் பேட்டிங் செய்து, ‘மீதமிருக்கும் நேரத்தில் முடிந்தால் பேட்டிங் செய்து தப்பித்துக்கொள்ளுங்கள்’ என்ற நிலைக்கு அவர்களைத் தள்ளுவதே எங்கள் திட்டம்.

அதனால்தான் தாமதமாக டிக்ளேர் செய்தோம். இருந்தாலும், போராட்டமே இல்லாமல் அவர்கள் எளிதாகச் சரிந்துவிடுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. நாளை காலையும் நாங்கள் மிகச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்