சினிமா

’நான் அதை ஸ்பைடர் படத்தில்தான் உணர்ந்தேன்’ – ரகுல் பிரீத் சிங்

பிரபல பாலிவுட் நடிகை ரகுல் பிரீத் சிங். பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் இந்த ஆண்டு ”மேரி ஹஸ்பண்ட் கி பிவி” படத்தின் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் அஜய் தேவ்கனுடன் ”தேதே பியார் தே 2” ல் நடித்திருந்தார். ஆர் மாதவன் மற்றும் தபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படம் நல்ல வசூலை பெற்றது.

இவர் தமிழில், தடையறத் தாக்க படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து என்னமோ ஏதோ, தீரன், ஸ்பைடர், தேவ், என்ஜிகே அயலான் மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில், “ஸ்பைடர்” தான் தன்னுடைய முதல் பெரிய தோல்வி என்று ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார். அவர் பேசுகையில்,

“ஸ்பைடர்” தான் என்னுடைய முதல் பெரிய தோல்வி. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருடன் நிறைய தெலுங்குப் படங்கள் நடித்திருந்தாலும், 8-10 மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அது என்னை மிகவும் பாதித்தது. உங்கள் எதிர்பார்ப்புகள் தகர்க்கப்படும்போது அது எப்படி இருக்கும் என்பதை நான் முதன்முதலில் உணர்ந்தது ஸ்பைடரில்தான்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்