சினிமா

அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் எழுத்தில் ‘பட்டுமா’… ‘LIK’ படத்தின் 2வது சிங்கிள்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‘LIK’ (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் 18-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ‘LIK’ படத்தின் 2வது பாடல் ‘பட்டுமா’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதுதொடர்பாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு முன்னதாகவே தெரிவித்து இருந்த நிலையில், தற்போது ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகி உள்ள ‘பட்டுமா’ பாடல் வரிகளை படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பதால் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்