சினிமா

இளையராஜா ஐகோர்ட்டில் வழக்கு: டியூட் படத்திலிருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கக்கோரி!

அனுமதியின்றி தனது பாடல்களை வேறு படங்களுக்கு பயன்படுத்தியதாக சோனி மியூசிக், எக்கோ ரெகார்டிங், ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் விசாரணையில் Dude திரைப்படத்தில் கூட தனது இரண்டு பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக இளையராஜா தரப்பு வாதம் முன்வைத்தனர். அது தொடர்பாக தனியாக வழக்குத் தொடரலாம் என நீதிபதி செந்தில்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து ‘Dude’ படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய தனது பாடலை நீக்கக்கோரி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி, 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாடல்களை தற்போது கேட்டு ரசிப்பது ட்ரெண்டாகி வருகிறது. பாடல்களை கேட்டு ரசிப்பதால் எப்படி இளையராஜா பாதிக்கப்படுகிறார்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு இளையராஜா தரப்பு, “அனுமதியின்றி பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தனது பாடலை உருமாற்றி உள்ளனர். பாடலுக்கான உரிமை எங்களிடம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது

‘டியூட்’ படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு மமிதா பைஜூ ஆடியுள்ள நடனம் 2K கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்