சினிமா

சூர்யாவின் 45-வது படமான ‘கருப்பு’ படத்தின் OTT குறித்து வெளியான அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ‘கங்குவா’ அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்து வெளியான ‘ரெட்ரோ’ படம் ஓரளவு வரவேற்பை பெற்றது என்று சொல்லாம்.

இதனை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள சூர்யாவின் 45-வது படமான ‘கருப்பு’ படம் விரைவில் வெளியாக உள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கையை இணைத்து உருவாகியுள்ளது. ‘கருப்பு’ திரைப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 23-ந்தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘கருப்பு’ படத்தின் ஓ.டி.டி. உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சாட்டிலைட் உரிமத்தை ஜீ5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்