சினிமா

முகமது குட்டி.. மம்மூட்டி ஆனது எப்படி?

நான் கல்லூரியில் படிக்கும் போது, என் பெயர் உமர் ஷெரீப் என்று எல்லோரிடமும் சொல்வேன்.

மலையாளத் திரையுலகில் மெகாஸ்டார் என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் மம்மூட்டி உடைய இயற்பெயர் ‘முகமது குட்டி பனப்பரம்பில் இஸ்மாயில்’ ஆகும்.

இந்நிலையில் தனது பெயர் மம்மூட்டி என மறுவியதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான கதையை அவர் பகிர்ந்துள்ளார்.

கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மம்மூட்டி தனது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தார்.

அப்போது, “நான் கல்லூரியில் படிக்கும் போது, என் பெயர் உமர் ஷெரீப் என்று எல்லோரிடமும் சொல்வேன். என் உண்மையான பெயர் முகமது குட்டி என்று யாருக்கும் தெரியாது.

ஒரு நாள், என் ஐடி கார்டு தற்செயலாக பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிட்டது. இதன் காரணமாக, எனது உண்மையான பெயர் முழு கல்லூரிக்கும் தெரிய வந்தது என்று தெரிவித்தார்.

அந்த நேரத்தில், அவரது நண்பர்களில் ஒருவரான சசிதரன், ஐடி கார்டில் ‘முகமது குட்டி’ என்ற பெயரை ‘மம்மூட்டி’ என்று தவறாகப் படித்ததாகக் கூறினார்.

எனவே, “அவர் தவறாகப் படித்த பெயர் பின்னர் எனக்குப் பொருத்தமாகிவிட்டது” என்று மம்மூட்டி சிரித்தபடி கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில், அவர் தனது நண்பர் சசிதரனை மேடைக்கு அழைத்து பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ரஜினியின் குசேலன் படம் போல நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்