இந்தியா

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. ராமதாஸ்!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலாக மாறியிருக்கிறது. ராமதாஸ் இருந்த ஒரு மேடையிலேயே அவருக்கு எதிராக ரியாக்ட் செய்தார் அன்புமணி. அதன்பின் தனியாகவும் செயல்பட துவங்கினார்.
செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் ‘அன்புமணிக்கு தலைமை பொறுப்பு இல்லை.. தொண்டர்களை சரியாக வழி நடத்தும் பக்குவம் இல்லை.. என் மனைவியே அவர் அடிக்க வந்தார். அவரை மத்திய அமைச்சர் ஆக்கியது நான் செய்த தவறு’ என்றெல்லாம் பரபரப்பு புகார் கூறினார். ஒரு பக்கம் ராமதாஸின் ஆதரவாளர்கள் சிலரை தன் பக்கம் இழுத்தார் அன்புமணி. தற்போது அன்புமணி பாமக, ராமதாஸ் பாமக என பாமக இரண்டாகப் பிரிந்து விட்டது.
பாமகவுக்கு இனிமே நான்தான் தலைவர் என அன்புமணி சொல்லி வருகிறார். ஆனால் அன்புமணியை தலைவராக நியமித்த காலக்கெடு முடிந்து விட்டது. இனிமேல் அவர் தலைவர் இல்லை’ என ராமதாஸ் கூறி வருகிறார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று கடலூர் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ் ‘சினிமாவில் எனக்கொரு மகன் பிறப்பான்.. அவன் என்னைப் போலவே இருப்பான்.. என்கிற ஒரு பாடல் வரி வரும். ஆனால் அன்புமணியோ என் உயிரை மட்டும்தான் பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டான்.. அவனை தலைவராக நியமித்த காலக்கெடு முடிந்து விட்டது..
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் இந்த ராமதாசை ஜெயிக்க முடியாது.. என்னுடைய ஆதரவாளர்களை எல்லாம் நீ எடுத்துக் கொண்டாய்.. இப்போது என்னிடம் எதுவுமில்லை.. எனது உரிமையை நீ பறிக்க நினைக்கிறாய்.. ஆனால் நான் 46 ஆண்டு காலம் மக்களை சந்தித்து இந்த கட்சிக்காக கொடுத்த உழைப்பையும் நீ பறிக்க நினைக்கிறாய்.. ஆனால் அது நடக்காது’ என்று கண்கலங்கியபடி பேசி இருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்