இந்தியா

செங்கோட்டையன் கிளை தான் மாறியிருக்கிறார்… கட்சி மாறவில்லை.. – உதயநிதி

ஈரோடு எழுமாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அமித்ஷா ஆலோசனைபடியே செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்துள்ளார். செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. ஒரே கட்சியின் வேறொரு கிளைக்கு மாறி இருக்கிறார்.

தனது கட்சி பெயரில் உள்ள திராவிடத்தை மறந்துவிட்டார் இபிஎஸ். ஆளுநர் திராவிடத்தை அவமதித்தபோது இபிஎஸ் எனது எதிர்ப்பும் கூறவில்லை.

இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.

அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூட பாஜகவிடம் எந்தக் கட்சியில் சேரலாம் என அனுமதி வாங்கி தான் சேர்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலகமாக உள்ளது.

அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்