நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். கட்சி துவங்கியது முதலே அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
நாம் தமிழர், அதிமுக, பாஜக போன்ற கட்சிகளின் பெயரை கூட அவர் சொல்வதில்லை. முழுக்க முழுக்க விஜயின் டார்கெட் திமுகவாக மட்டுமே இருக்கிறது.
கலைஞர் கருணாநிதிக்கு பின் அவரின் மகன் மு.க.ஸ்டாலின், அவருக்கு பின் அவரின் மகன் உதயநிதி என தமிழகத்தை ஆள்வதில் விஜய்க்கு விருப்பமில்லை. வாரிசு அரசியலை அவர் வெறுக்கிறார். எனவே, அதை எதிர்த்தே அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார் என தவெகவினர் சொல்கிறார்கள்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் நோக்கமாக இருக்கிறது.
திமுகவை அழிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை. திமுகவின் சூழ்ச்சிகளில் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் என நினைக்கிறோம். எனவே, திமுகவை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களோடு ஒன்று சேருவோம்’ என தெரிவித்திருக்கிறார்.

