இந்தியா

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தான் என்று முன்னர் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், பாமக தலைவராக அன்புமணி தொடர்ந்து நீடிக்க முடியாது என்று அறிவித்துள்ளது.

அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை, பாமகவின் நிறுவனரே தலைவராகவே தொடர்வார் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “46 ஆண்டுகாலம் உழைத்து வளர்த்த பாமக-வை என்னிடமிருந்து பறிக்க செய்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டு, மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தருவேன் என்று அவர் உறுதி அளித்துள்ளார். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, அன்புமணி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என்று பாமக வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்