தமிழ் சினிமாவில் 2000 ஆண்டு ஒரு முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் நடித்து தனக்கென ஒரு தனி மார்க்கெட்டை தக்க வைத்தவர். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகா தற்போது குடும்பம் பிசினஸ் குழந்தைகள் என மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோட் திரைப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார் சினேகா. அதுவும் விஜய்க்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்தார். ஏற்கனவே விஜயுடன் புதிய கீதை படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் சினேகா.
அதன் பிறகு கோட் திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக அந்த படத்தில் நடித்திருப்பார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி கோட் திரைப்படத்தில் மீண்டும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது. அதைப்போல பிரசன்னாவும் அஜித்துடன் குட்பேட்அக்லி திரைப்படத்தில் அஜித்துக்கு நண்பனாக நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் மார்கழி உற்சவம் என்ற பெயரில் ஒரு விழா நடைபெற்றது .வருடம் தோறும் நடைபெறும் அந்த விழாவில் பிரபலங்கள் பலரும் பாரம்பரிய உடை அணிந்து ரேம்ப் வாக் செய்வது வழக்கம். அந்த வகையில் சினேகாவும் மகாராணி போல பட்டு சேலையில் வந்து அனைவரையும் ஈர்த்தார்.
அவர் அணிந்திருந்த அந்த சேலை தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் சினேகாவிடம் அவருடைய இந்த உடையை பற்றியும் அவர் நடத்திவரும் ஸ்நேகாலயா சில்க் கடைப் பற்றியும் கேட்டனர். அது மட்டுமல்ல விஜய் அஜித் இவர்களைப் பற்றியும் சில கேள்விகளை கேட்டனர். கோத் திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்தீர்கள். அதேபோல பிரசன்னாவும் அஜித்துடன் குட்பேட்அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர்கள் இப்போது தனி தனி பாதையை தேர்ந்தெடுத்து சென்று விட்டார்கள்.
அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு இருவருமே அவர்களுடைய பேஷன் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அது ஒரு நல்ல விஷயம்தான். அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருவரும் இருக்கிறார்கள் என பிரசன்னா கூறினார். 2026 இல் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு நான் சொல்லி மாற்றம் வரப்போவது கிடையாது .மக்கள் அனைவரும் சேர்ந்துதான் அதை செய்ய வேண்டும் என கூறினார் .இதே கேள்வியை சினேகாவிடம் கேட்ட பொழுது கணவர் சொன்னது தான் என கூறி சட்டென அந்த பதிலை முடித்து விட்டார்.
அது மட்டுமல்ல தன்னுடைய சினேகாலயா கடை மூலமாக இன்னொரு ஒரு வித்தியாசமான பயணத்தை தொடங்க இருக்கிறோம். தற்போது மணமக்கள் பெண்களுக்கான கடையாக அது இருக்கிறது. அடுத்த கட்டமாக மணமகனுக்கும் ஆண்களுக்குமான ஆடைகளை வடிவமைத்து கொடுக்கும் ஒரு முயற்சியில் இறங்கி இருக்கிறோம் .எங்களுடைய முழு கவனமும் இப்போது அதில் தான் இருக்கிறது. மற்றபடி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது வரை இல்லை என சினேகா கூறினார்.

