விளையாட்டு

WWE ஜாம்பவான் ஜான் சீனா ஓய்வு: கடைசி போட்டியில் தோல்வி.. ரசிகர்கள் வருத்தம்..

உலக மல்யுத்த பொழுதுபோக்கு உலகின் உச்ச நட்சத்திரமான ஜான் சீனா தனது மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தனது கடைசி போட்டியில், குண்டூர் என்பவருடன் ‘டேப் அவுட்’ முறையில் தோல்வியடைந்ததால், அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

2002 ஆம் ஆண்டு WWE-இல் அறிமுகமான ஜான் சீனா, 90ஸ் கிட்ஸ்களின் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர். கடைசி வரை போராடும் அவரது விடாமுயற்சி குணம் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தது.

மல்யுத்த அரங்கில் அவர் மொத்தம் 17 முறை உலக சாம்பியன் உட்பட பல முக்கியச் சாதனைகளை படைத்துள்ளார். இதில் 5 யுனைடெட் ஸ்டேட் சாம்பியன்ஷிப் மற்றும் 2 ராயல் ரம்பிள் வெற்றிகளும் அடங்கும்.

மல்யுத்தத்தை விட்டு விலகினாலும், ஜான் சீனா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 2006-ல் ‘தி மெரைன்’ படத்தில் நாயகனாக அறிமுகமான அவர், அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ள மூன்று படங்களிலும் நடிக்கவுள்ளார். இது, மல்யுத்த அரங்கில் அவரை மிஸ் செய்யும் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்