சினிமா

அஜித் ரசிகர் மன்றத்தை கலைச்சதுக்கான காரணம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். ஆரம்பகாலத்தில் இருந்ததுக்கும் இப்போது இருக்கும் அஜித்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தற்போது மிகவும் பக்குவப்பட்டவராகவும் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவராகவும் தன்மையாகவும் மாறியிருப்பதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் துரை ராமச்சந்திரன் அஜித்தை பற்றி சில விஷயங்களை ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இவர் பத்திரிக்கையாளராக மட்டும் இல்லாமல் ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஏன் ராதிகாவுக்கு கணவனாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார் துரை ராமச்சந்திரன். அமராவதி படத்தில் நடிக்கும் போது அஜித்தின் புகைப்படத்தை பத்திரிக்கை அட்டையில் போடுவதற்கு பிரிண்ட் வந்ததாம்.

யாருப்பா இந்த பையன்? சுமாரா இருக்கிறான் என்று கேட்டவரும் இந்த துரை ராமச்சந்திரன் தான். போக போக அஜித்துக்கு படங்கள் வாய்ப்பு வர அவருக்கு கூடவே டென்ஷனும் அதிகமாகிவிட்டதாம். எதற்கெடுத்தாலும் அஜித் டென்ஷனாகிவிடுவாராம். ரசிகர் மன்றத்தை கலைச்சதுக்கு பின்னணியில் உள்ள காரணம் தெரியுமா என்று அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்,

இதற்கு முன் ரசிகர்கள் அவரவர் குடும்பத்தை பார்க்கவேண்டும், தனக்காக சில சமயங்களில் உயிரை விடும் மாதிரியான சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என்ற காரணத்தினால்தான் அவர் ரசிகர் மன்றத்தையே கலைத்தார் என்ற ஒரு தகவல் இது நாள் வரை இருந்தது. ஆனால் உண்மையான காரணம் அது இல்லையாம். ஆரம்பத்தில் அஜித் ரசிகர் மன்றத்தை தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியும் அவரது தம்பியும் தான் நிர்வகித்து வந்தார்களாம்.

ரசிகர் மன்றத்தின் மூலமாக எந்தவொரு ரசிகருக்கு திருமணம் நடந்தாலும் சுரேஷ் சக்கரவர்த்தி 1000, 5000 என மொய் வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாராம். அதே சமயம் அஜித்துக்கு சில படங்களில் சம்பளம் பாக்கியும் வைத்திருந்தாராம் சக்கரவர்த்தி. சம்பளத்தை பற்றி அஜித் கேட்கும் போது ரசிகர் மன்றத்துக்காக அவர் செய்த செலவுகளை பற்றிக் குறிப்பிடுவாராம் சக்கரவர்த்தி. இதனால்தான் அஜித் அந்த ரசிகர் மன்றத்தையே கலைக்க சொன்னாராம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்