ஐபிஎல் மினி ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரகசியங்களை அஸ்வின் கசியவிட்டதாக எழுந்த புகார்களுக்கு, அவர் தனது டிரேட்மார்க் பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
ஏலத்தின் போது பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய வீரர்களை சிஎஸ்கே வாங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே அஸ்வின் அவர்களை பற்றி பதிவிட்டதாக சில பயனர்கள் குற்றம் சாட்டினர். இதன் மூலம் மற்ற அணிகள் விலையை உயர்த்த அஸ்வின் வழிவகுத்தார் என ட்ரோல்கள் கிளம்பின.
இதற்கு பதிலளித்த அஸ்வின் ஹைதராபாத் போன்ற அணிகள் முரளிதரன், வெட்டோரி போன்ற ஜாம்பவான்களை ஆலோசனை குழுவில் வைத்துள்ள போது, அவர்கள் தனது ட்வீட்டை பார்த்து ஏலம் எடுப்பார்கள் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது என நக்கலாக குறிப்பிட்டார்.
எப்போதும் போல, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் விஷமத்தனமான கருத்துகளுக்கு தனது அறிவுப்பூர்வமான நகைச்சுவை மூலம் அஸ்வின் இப்போதும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

