நாகர்ஜூனா என்றால் நம் மக்களுக்கு உடனே நியாபகம் வருவது சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா பாடல்தான். சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் ரட்சகன் படத்தில் அவருடைய தனித்துவமான ஹேர் ஸ்டைல்தான் இன்றுவரை அவருக்குண்டான அடையாளமாக பார்க்கப்படுகிறது. வயசானாலும் உன் அழகும் திமிரும் இன்னும் உன்னை விட்டு போகலனு படையப்பா படத்தில் வசனம் இருக்கும்.
அது ரஜினியை விட நாகர்ஜூனாவிற்கு கச்சிதமாக பொருந்தும். ரட்சகன் படத்தில் எப்படி இருந்தாரோ அதே மாதிரிதான் இன்று வரை இருக்கிறார். தெலுங்கில் பெரிய சூப்பர் ஸ்டார்தான் நாகர்ஜூன். அவருடைய அப்பா நாகேஷ்ராவ்வும் பெரிய நடிகர். பார்ன் வித் டைமண்ட் ஸ்பூன் என்றே சொல்லலாம் நாகர்ஜுனாவை. அந்தளவுக்கு பிறக்கும் போதே கோடீஸ்வர குடும்பத்தில்தான் பிறந்தார்.
அவருக்கு சொந்தமாக ஐதரபாத்தில் அன்னபூர்ணா என்ற பெயரில் ஸ்டூடியோ இருக்கிறதாம். அதன் மதிப்பு கிட்டத்தட்ட 500 கோடி வரை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு ஒரு மேன்சனையும் நடத்திக் கொண்டிருக்கிறாராம் நாகர்ஜூனா. அதன் மதிப்பு கிட்டத்தட்ட 50 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அவருடைய மொத்த சொத்த மதிப்பே 4000 கோடி வரை இருக்குமாம்.
ஆனால் அதன் இப்போதைய மதிப்பு 7000 கோடி வரை இருக்கலாம் என்றும் தெரிகிறது. அதுமட்டுமில்ல. ரியல் எஸ்டேட் பிசினஸும் நாகர்ஜூனா செய்து கொண்டு வருகிறாராம். இதில் அவர் மீது சில சர்ச்சைகளும் ஆரம்பத்தில் கிளம்பியது. புறம்போக்கு நிலத்தை எல்லாம் நாகர்ஜூனா வளைத்து போட்டார் என்ற ஒரு புகார் அவர் மீது எழுந்தது. ஆனால் அவர் அப்படிப்பட்ட நபரே கிடையாது என தயாரிப்பாளர் செந்தில் பிரபு கூறினார்.
நாகர்ஜுனாவின் முதல் மனைவி பெயர் லட்சுமி. இவர் பிரபல பழம்பெரும் நடிகர் ராம நாயுடு என்பவரின் மகளாம். தெலுங்கு நடிகர் வெங்கடேசின் தந்தைதான் இந்த ராம நாயுடு. ஆனால் அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட அவர்கள் பிரிந்துவிட்டனர். அதன் பிறகுதான் அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இடையில் நாகர்ஜூனாவிற்கும் தபுவுக்கும் இடையில் நெருக்கம் இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதை அமலாவே ஒரு பேட்டியில் கடுமையாக எதிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

