சினிமா

‘ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்’ இறுதி பாகத்தில் ரொனால்டோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ‘ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படத் தொடரின் இறுதி பாகத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, படக்குழுவினர் ரொனால்டோவின் புகைப்படத்தை பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

‘ஃபாஸ்ட் எக்ஸ்: பார்ட் 2’ என பெயரிடப்பட்டுள்ள இந்த இறுதி பாகத்தில், ரொனால்டோவுக்காகவே ஒரு பிரத்யேக கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ரொனால்டோ, முதன்முறையாக ஹாலிவுட் ஆக்ஷன் களத்தில் இறங்குவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைதானத்தில் மின்னல் வேகத்தில் ஓடும் ரொனால்டோ, இப்போது திரையில் அதிவேக கார்களுடன் சாகசம் செய்யப்போகிறார். இந்த திரைப்படம் 2027 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு மற்றும் சினிமா துறையின் இந்த மாபெரும் கூட்டணி, பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்