மேற்கு வங்க மாநிலத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக தரையிறக்க முடியாமல் கொல்கத்தாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
நதியா மாவட்டத்தின் தாஹேர்பூரில் நடைபெறவிருந்த மத்திய அரசின் வளர்ச்சி திட்ட தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் இன்று காலை ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
தாஹேர்பூர் பகுதியில் நிலவிய மிக கடுமையான பனிமூட்டம் காரணமாக தெரிவுநிலை குறைவாக இருந்ததால், ஹெலிகாப்டரை தரையிறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி விமானிகள் ஹெலிகாப்டரை மீண்டும் கொல்கத்தா விமான நிலையத்திற்கே கொண்டு சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
நேரில் வர முடியாத சூழலால், பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரை காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.

