2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக டி20 போட்டிகளில் கில் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், அவரது துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது பிசிசிஐ செய்துள்ள ஒரு தவறை திருத்தும் நடவடிக்கை என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, சஞ்சு சாம்சன் இரண்டு டி20 சதங்களை அடித்து ஃபார்மில் இருந்தபோதும், கில்லுக்காக அவர் ஓரம் கட்டப்பட்டார். ஆனால், கில் கடந்த 15 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்க தவறியதால், தற்போது சஞ்சு சாம்சன் மீண்டும் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிரடி மாற்றத்திற்கு பின்னால் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வீரரின் கடந்த கால புகழை விட தற்போதைய ஃபார்மிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கம்பீரின் பாணி இந்த தேர்வில் பிரதிபலிக்கிறது. மேலும், ஜித்தேஷ் சர்மாவுக்கு பதிலாக அதிரடி வீரர் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

