சினிமா

இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய ‘அனிமல்’ திரைப்படம்.. ஜப்பான் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகி உலகளவில் ரூ.917 கோடி வசூலித்த ‘அனிமல்’ திரைப்படம், தற்போது ஜப்பானில் வெளியாக உள்ளது.

தந்தை-மகன் இடையிலான சிக்கலான உறவை பேசும் இத்திரைப்படம், வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி ஜப்பானிய திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் இப்படம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தினாலும், வசூல் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது.

குறிப்பாக, இப்படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்புக்காக தேசிய விருதுகள் கிடைத்தன. ரன்பீர் கபூருடன் அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் த்ரிப்தி டிம்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஏற்கனவே இந்திய திரைப்படங்களுக்கு ஜப்பானில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், ‘அனிமல்’ அங்குள்ள ரசிகர்களை ஈர்க்குமா என்ற பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்திய திரையுலகின் தற்போதைய ட்ரெண்ட் செட்டர் படமாக கருதப்படும் இது, சர்வதேச அளவில் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்