விளையாட்டு

பும்ராவும், ரிஷப் பந்த்தும் என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள்.. டெம்பா பவுமா பேட்டி..!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா, இந்திய சுற்றுப்பயணத்தின் போது மைதானத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடிய டெஸ்ட் தொடரின் போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, பவுமாவின் உருவத்தை கேலி செய்யும் விதமாக ‘பவுனா’ என்று அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், போட்டி முடிந்த பிறகு பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் நேரில் வந்து தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக பவுமா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பவுமா, “அவர்கள் தங்களின் மொழியில் என்னை பற்றி ஏதோ பேசியது எனக்கு தெரியும். ஆனால், பும்ராவும் ரிஷப் பந்தும் கண்ணியமான முறையில் என்னிடம் வந்து மன்னிப்பு கோரியது நெகிழ்ச்சியாக இருந்தது. மைதானத்தில் நடக்கும் மோதல்கள் அங்கேயே முடிந்துவிட வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

மேலும், தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் இந்திய அணியினரை இழிவுபடுத்தும் வகையில் ‘மண்டியிடச் செய்தோம்’ என்று பயன்படுத்திய வார்த்தையை தவிர்த்திருக்க வேண்டும் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். இத்தகைய சர்ச்சைகள் வீரர்களுக்கிடையிலான வன்மத்தை வளர்க்காமல், ஒரு உத்வேகமாக மட்டுமே இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்