விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இளம் நட்சத்திர வீரர் சாய் சுதர்சன், தற்போது காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். போட்டியின் போது வேகமாக ரன் எடுக்க முயன்று ‘டைவ்’ அடித்த போது, அவருக்கு பலமான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சாய் சுதர்சனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முழுமையாக குணமடைய குறைந்தது ஆறு வாரங்கள் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, அவர் தற்போது நடைபெற்று வரும் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்தக் காயத்தின் தாக்கம் வரும் ஐபிஎல் தொடரிலும் எதிரொலிக்கும் என தெரிகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய தூணாக விளங்கும் சாய் சுதர்சன், காயத்திலிருந்து மீள காலதாமதமானால், தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
அவர் விரைவில் குணமடைந்து மைதானத்திற்குத் திரும்ப வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

