தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக கருதப்படுபவர் நடிகர் கமல். சிவாஜிக்கு பிறகு நடிப்பில் கை தேர்ந்தவர் என போற்றப்படும் நடிகராக இருப்பவர் கமல். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ஆளுமையாக இருக்கிறார், இவருடைய அனுபவம் இன்று எண்ணற்ற இளைய தலைமுறைகளுக்கு ஒரு பாடமாக இருந்து வருகிறது.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வருபவர்களுக்கு இவருடைய ஒவ்வொரு படங்களும் புத்தகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு வித்தியாசமான கதை விதவிதமான கேரக்டர் என ஒரு உன்னதமான நடிகராக இன்றுவரை திகழ்ந்து வருகிறார். இப்போது அரசியலில் ஆர்வம் காட்டி வரும் கமல் பாராளுமன்ற எம்பி ஆகவும் செயல்பட்டு வருகிறார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலை இவர் எப்படி எதிர்நோக்க இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ரஜினி அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு இல்லை என்றாலும் நடிப்பு என்று பார்க்கும் பொழுது இவரை அடித்துக் கொள்ள வேறு எந்த நடிகரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை விஷயங்களையும் கரைத்து குடித்தவர்.
சினிமாவைப் பற்றி இவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது என்று சொல்லலாம். இந்த நிலையில் கமலை பற்றி இயக்குனர் ராஜகுமாரன் ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். தன்னுடைய வீட்டிற்கு மதிய சாப்பாட்டிற்கு வருகிறேன் என்று கமல் தரப்பிலிருந்து ஒரு தகவல் ராஜகுமாரனுக்கு வந்திருக்கிறது. அதற்கு ராஜகுமாரன் ‘வரச் சொல்லுங்கள், நான் வீட்டை பூட்டிவிட்டு போகிறேன் .வந்து அவரை உட்கார்ந்து சாப்பிட்டு போகச் சொல்லுங்கள்’ என்று கூறினாராம் ராஜகுமாரன்.
அதற்கு காரணம் கிட்டத்தட்ட 30 வருடங்களாக இங்குதான் இருக்கிறோம். இத்தனை ஆண்டுகள் எங்களை வந்து பார்க்காத கமல் இப்போது தேர்தல் நிமித்தமாக எங்களை பார்க்க வருகிறார் என்றால் அது எனக்கு பிடிக்கவில்லை என்று ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

