இந்தியா

தமிழ்நாடு, கேரளா தான் முக்கியம்.. காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்..!

கடந்த ஆண்டு பீகார் மற்றும் டெல்லி தேர்தல்களில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்த நிலையில், 2026-ல் நடைபெறவுள்ள கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்கள் அக்கட்சிக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியின் வேகத்தை அப்படியே சட்டமன்ற தேர்தலிலும் தக்கவைத்து, மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர கேரளா காங்கிரஸ் கமிட்டி தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்தால் ஒரு வலுவான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. இதன் மூலம் தமிழகத்திலும் ஒரு கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

கேரளாவில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் காங்கிரசுக்கு சாதகமாக தென்படுவதால், உட்கட்சி பூசல்களை களைந்து ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்