விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

வங்கதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ஐபிஎல் போட்டிகளை அந்த நாட்டில் ஒளிபரப்ப அந்நாட்டு தற்காலிக அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஒரு வங்கதேச வீரரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் நீக்க வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தியதாக கூறப்படும் தகவல்களே இந்த தடைக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

சமீபகாலமாக இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கிரிக்கெட் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தஃபிசுர் என்ற வீரரை ஐபிஎல் போட்டியில் இருந்து நீக்க வற்புறுத்தியது அந்நாட்டு ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்குப் பதிலடியாக, ஐபிஎல் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு உரிமம் பெற்ற சேனல்களுக்கு வங்கதேச தகவல் தொடர்புத் துறை தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்தத் தடையால் வங்கதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்