வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் கைதுக்கு பிறகு, அந்நாட்டின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்கப்போவதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் மீண்டும் அமெரிக்காவின் வர்த்தக நலன்களுக்கு பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒரு “ஆயுதம் ஏந்திய ஆக்கிரமிப்பு” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.
சீனா தனது தரப்பில், இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது நடத்தப்பட்ட அத்துமீறல் என்றும், சர்வதேச விதிகளை அமெரிக்கா காலால் மிதித்துவிட்டது என்றும் கூறியுள்ளது.
உலகிலேயே அதிக எண்ணெய் இருப்பு கொண்ட வெனிசுலாவை தனது பிடியில் வைத்திருப்பதன் மூலம், தென் அமெரிக்காவில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா துடிக்கிறது.
இந்த ‘எண்ணெய் போர்’ வரும் நாட்களில் ஒரு பெரிய சர்வதேச மோதலாக வெடிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

