சினிமா

விஜய் சார் மூலம் ‘பகவந்த் கேசரி’ படத்தின் கதையை பார்க்க ஆவலுடன் உள்ளேன்: ஸ்ரீலீலா

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப்போகிறது. நடிகர் விஜய்யின் நடிப்பில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. அதனை தொடர்ந்து அடுத்த நாளே சிவகார்த்திகேயன் ஸ்ரீலீலா நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படமும் திரைக்கு வரவுள்ளது. ஒரே பண்டிகை காலத்தில் தனது இரண்டு பெரிய படங்கள் அடுத்தடுத்து வெளியாவது குறித்து நடிகை ஸ்ரீலீலா நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ‘பகவந்த் கேசரி’ படத்தின் கதை மீண்டும் ஒருமுறை திரையில் சொல்லப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, நான் மிகப்பெரிய ரசிகையாக மதிக்கும் விஜய் சார் மூலம் இந்த கதை மக்களிடம் செல்வது ஒரு அற்புதமான விஷயம்,” என்று கூறியுள்ளார்.

ஜனநாயகன் படத்தின் போட்டியான பராசக்தி படத்தின் நாயகியான ஸ்ரீலீலா தர்மசங்கடமின்றி தனது ரசிக மனோபாவத்தை வெளிப்படுத்தியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்