விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்

மிக குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய அவரை பாராட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கங்களில் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

மேலும், விஜய் ஹசாரே தொடர் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் ருதுராஜ் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அவரது இந்த அபாரமான ஃபார்ம் மற்றும் சீரான ஆட்டத்திறன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இருப்பினும், இவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவர் இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது விவாதங்களை எழுப்பியுள்ளது.

இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், “ருதுராஜ் போன்ற ஒரு திறமையான வீரர் இந்திய அணிக்கு தேர்வாகாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது’ என தனது சமூக வலைதளத்தில் வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ருதுராஜ் காட்டி வரும் இந்த அதிரடி ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்