தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில், “உங்க கனவ சொல்லுங்க” என்ற புதிய மக்கள் தொடர்பு திட்டத்தை அறிவித்துள்ளார். மக்களின் தேவைகளை கேட்டு, அவற்றை திட்டங்களாக மாற்றுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் என குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக தனிக்குழுக்கள் மக்களின் வீடு தேடி வரும் என தெரிவித்துள்ளார்.
2030-ஆம் ஆண்டிற்குள் மக்களின் கனவுகளை நனவாக்க தான் பாடுபடுவேன் என்றும், இதுவே தனது வாக்குறுதி என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இந்தத் திட்டம் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களுடன் நேரடியாக உரையாடும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. தனிநபர்களின் கனவுகள் நனவானால், அது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான கனவாக மாறும் என்ற கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.
நவீன தொழில்நுட்பம் மற்றும் நேரடி பயணங்கள் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை பெற்று, அதனை அடுத்த ஐந்தாண்டு கால வளர்ச்சிக்கான திட்ட அறிக்கையாக மாற்ற திமுக திட்டமிட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

