நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வதோதராவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் அடங்கிய இந்திய அணி, ஜனவரி 11-ம் தேதி வதோதராவில் உள்ள பி.சி.ஏ மைதானத்தில் முதல் போட்டியில் களம் காண உள்ளது.
சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 2023 உலக கோப்பைக்குப் பிறகு அவர் பதிவிடும் முதல் கிரிக்கெட் பதிவு இது என்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மேற்பார்வையில், பவுன்சர் பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிடும் கோலியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி மேலும் 94 ரன்கள் எடுத்தால், நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

