சினிமா

திடீரென சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி!.. போட்டோ செம வைரல்!

1950, 60களில் பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த தேவிகாவின் மகள் கனகா. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்து சூப்பர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே தொடர்ந்து பல படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்தன. ரஜினி, பிரபு, கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார் கனகா.

ஆனால் அவரின் தாய் தேவிகா மறைந்ததால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார் கனகா.. அதோடு தனது வீடு உள்பட சில சொத்துக்களை தனது அப்பா தன்னிடமிருந்து பறிக்க முயல்வதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மேலும் சினிமாவில் நடிப்பதையும், தனக்கு தெரிந்தவர்களை சந்திப்பதையும் தவிர்த்த கனகா வீட்டிலேயே தன்னை சிறைப்படுத்திக் கொண்டார். பல மாதங்களாக அவர் வீட்டை விட்டு வெளி வராமல் கூட இருந்தார்.

கனகாவை பற்றி ஒரு பேட்டியில் சொன்ன ராமராஜன் ‘கனகா என்னை சந்திக்க வந்திருப்பதாக ஒருவர் சொன்னார்.. வெளியே வந்த பார்த்தபோது ஒருவர் நின்று கொண்டிருந்தார்.. அவரிடமே ‘கனகா எங்கே?’ என்று கேட்டேன். ‘நான்தான் கனகா’ என்றார். என்னாலேயே நம்ப முடியவில்லை’ என்று சொல்லியிருந்தார் ராமராஜன்.

இந்நிலையில், திடீரென ராமராஜன் வீட்டுக்கு சென்ற கனகா அவருடன் மதிய உணவு அருந்தியிருக்கிறார்.. அவருடன் சிறிது நேரம் செலவழித்து விட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்