இந்தியா

கல்யாணம் பண்ணக் கூடாது!.. ராணுவ வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு

இந்திய ராணுவத்தில் பல பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் பல இளைஞர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள பல ஊர்களில் இருந்தும் ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.இந்நிலையில்தான் அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் சேரும் அக்னி வீரர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை இந்திய ராணுவம் அறிவித்திருக்கிறது.

அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் இணையும் அக்னி வீரர்கள் தங்கள் பதவிக்காலத்தில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அக்னிபாத் திட்டத்தின்கீழ் வீரர்கள் 4 ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார்க.ள் அந்த 4 ஆண்டுகள் முடிந்த பின் அவர்கள் நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, அதுவரை அவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என கூறப்பட்டிருக்கிறது.

அதற்குக் காரணம் 24 மணி நேரமும் தேசத்திற்காக பணியில் இருக்கும் ஒரு இராணுவ வீரர் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு கவனச் சிதறல் ஏற்படும். மேலும் அவரை ஒரு ஒழுக்கமான மற்றும் திறமையான போர்வீராக மாற்ற தனிமையாக இருப்பது அவசியம் என இராணுவம் நினைக்கிறது.. எனவேதான் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

எனவே அக்னிபாத் திட்டத்தில் இணையும் வீரர்கள் தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சான்றிதழை கொடுக்க வேண்டும். அதேபோல் திருமணம் செய்து அதை மறைத்திருந்தால் அதை ஒழுங்கீனமாக கருதப்பட்டு பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்.. அவர்களுக்கு சலுகைகளும் கிடைக்காது’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்