விளையாட்டு

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

மகளிர் பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு அரங்கேறியது.

குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வீராங்கனை ஆயுஷி சோனி , WPL வரலாற்றிலேயே ‘ரிட்டயர்டு அவுட்’ ஆன முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஜனவரி 13 அன்று நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆயுஷி சோனி தனது அறிமுக ஆட்டத்தை ஆடினார். 6-வது வரிசையில் களமிறங்கிய அவர், 14 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் குவிக்க திணறினார்.

அணியின் ரன் விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், 16-வது ஓவர் முடிவில் குஜராத் அணி நிர்வாகம் அவரை ‘ரிட்டயர்டு அவுட்’ முறையில் வெளியேற செய்தது. அவருக்கு பதிலாக களமிறங்கிய பாரதி புல்மாலி, அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 36 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கிரிக்கெட்டில் இது ஒரு தந்திரமான முடிவாக பார்க்கப்பட்டாலும், WPL வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்