கனடா

முதியவரிடம் $4,000 திருடிய நூதன திருடர்கள்

Toronto Police இப்போது ஒரு அதிர்ச்சிகரமான Credit Card மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த December 29, 2025 அன்று, ஒரு முதியவர் தொலைபேசி வழியாக ஏமாற்றப்பட்டு சுமார் $4,000 இழந்துள்ளார்.

அந்த முதியவருக்கு வந்த போன் காலில் பேசிய நபர், தான் ஒரு Credit Investigator என்றும், முதியவரின் Credit Card ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். கார்டைப் பாதுகாக்க அதை உடனே துண்டுகளாக வெட்டி விடுமாறு அந்த நபர் கூறியுள்ளார்.

பின்னர், அந்த துண்டுகளை பெற்றுக்கொள்ள ஒரு Ride-share courier உங்கள் வீட்டிற்கு வருவார் என்று கூறியுள்ளார். சொன்னது போலவே ஒரு நபர் கருப்பு நிற BMW X5 காரில் வந்து அந்த கார்டு துண்டுகளை பெற்றுச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த முதியவரின் கணக்கிலிருந்து $4,000 திருடப்பட்டுள்ளது. Suspect 1 என்பவன் 25-35 வயதுடையவன், அவன் Nike தொப்பி மற்றும் Morocco நாட்டின் கால்பந்து ஜெர்சி அணிந்திருந்தான்.

Suspect 2 பச்சை நிற ஜாக்கெட் அணிந்திருந்தான். வங்கிகள் ஒருபோதும் இப்படி கார்டுகளை நேரில் வாங்க வராது என்றும், உங்கள் PIN அல்லது கார்டை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் Toronto Police அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு