உலகம்

ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா!.. வெனிசுலா எண்ணெய் கப்பல் பறிமுதல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே பல அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அதிகப்படியான வரிகளை விதித்து வருகிறார். ரஷ்யாவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூட சமீபத்தில் 500 சதவீதம் வரியை விதித்தார்.

ஒருபக்கம் எண்ணெய் வளம் மிக்க நாடுகளை கைப்பற்றும் நடவடிக்கைகளில் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் வெனிசுலா அதிபரையும் அவரின் மனைவியையும் அமெரிக்க படையினர் சிறைபிடித்தனர். போதை மருந்து கடத்தலை வெனிசுலா அதிபர் ஊக்குவிக்கிறார். அமெரிக்காவில் பெருமளவு போதை மருந்து புழங்குவதற்கு வெனிசுலா அதிபர்தான் காரணம் என டிரம்ப் சொன்னாலும் வெனிசுலாவில் அதிக எண்ணெய் வளம் இருப்பதால்தான் அமெரிக்கா அந்த நாட்டை கைப்பற்ற நினைக்கிறது என அரசியல் விமர்சனங்கள் சொன்னார்கள்.

அதை நிரூபிப்பது போல அதிக எண்ணெய் வளம் கொண்ட கிரின்லாந்தை நாங்கள் கைப்பற்றுவோம் என டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

ஒரு பக்கம் ஈரம் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா ஈரான் அரசையும் அமெரிக்க கட்டப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

இந்நிலையில் கரீபியன் கடல் பகுதியில் சென்ற வெனிசுலாவிற்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றை அமெரிக்க படைகள் பறிமுதல் செய்திருக்கிறது. வெனிசுலாவில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை அமெரிக்கா தொடர்ந்து பறிமுதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த