உலகம்

கிரீன்லாந்து டென்மார்க்குக்கே சொந்தம்!.. ரஷ்ய அதிபர் அதிரடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த சில நாட்களாகவே அதிரடி அரசியலை செய்து வருகிறார். அதிரடி என்று சொல்வதை விட அடாவடி அரசியல் என்றும் சொல்லலாம்.

அவருக்கு பிடிக்காத சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்து வருகிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யும் இந்தியாவிற்கு 500 சதவீதம் வரியை விதிக்கும் மசோதாவில் சமீபத்தில் கையெழுத்திட்டார்.

இப்படி உலக நாடுகளில் மிரட்டுவது ஒருபக்கம் எனில், ஒருபக்கம் எண்ணெய் வளம் மிக்க நாடுகளை கைப்பற்றும் முயற்சியிலும் இறங்கி டிரம்ப் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் வெனிசுலா அதிபரை சிறை பிடித்து சிறையில் அடைத்தார். வெனிசுலாவில் எண்ணெய் வளம் அதிகமாக இருப்பதால் அதை கைப்பற்றவே இந்த சம்பவத்திற்கு பின்னணி என சொல்லப்பட்டது.

அதேபோல் டென்மார்க்கில் உள்ள கிரீன்லாந்து தீவை நாங்கள் கைப்பற்றுவோம் அல்லது விலைக்கு வாங்குவோம் என டிரம்ப் கூறினார். சொல்லியிருந்தார். இதற்கு ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் நாங்கள் கிரீன்லாந்தை எடுத்துக்கொள்ளவில்லை எனில் ரஷ்யா அல்லது சீனா கிரீன்லாந்தை கைப்பற்றி விடுவார்கள் என டிரம்ப் சொன்னார்.

இந்நிலையில் இந்த கருத்தை மறுத்துள்ள ரஷ்ய அதிபர் புதின் ‘கிரீன்லாந்து டென்மார்க்குக்கே சொந்தம்.. அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது’ என்று சொல்லியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த