கனடா

Canada பாஸ்போர்ட் இவ்வளவு பவரா?

Canada நாட்டின் பாஸ்போர்ட் உலக அரங்கில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான Henley Passport Index 2026 தரவரிசையில், Canada உலக அளவில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் Canadian குடிமக்கள் உலகின் 181 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது விமான நிலையத்தில் இறங்கியவுடன் விசா பெற்றுக் கொண்டு தடையின்றி பயணம் செய்ய முடியும்.

இந்த தரவரிசையில் Canada, Iceland மற்றும் Lithuania ஆகிய நாடுகளுடன் எட்டாவது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், உலக வல்லரசு நாடான அமெரிக்காவை விட கனடா முன்னிலையில் உள்ளது. அமெரிக்கா தற்போது 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருந்த கனடா, தற்போது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் கடும் போட்டியால் எட்டாவது இடத்திற்கு வந்தாலும், அதன் Travel Freedom இன்னும் குறையவில்லை. சிங்கப்பூர் 192 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதியுடன் முதலிடத்திலும், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை இரண்டாம் இடத்திலும் உள்ளன.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளைக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கனடா பாஸ்போர்ட் வைத்திருப்பது சர்வதேச அளவில் அதிக மதிப்புடையதாகவும், உலகளாவிய பயணங்களுக்கு எளிதானதாகவும் கருதப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு