விளையாட்டு

மூத்த வீரர்கள் விலகி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்.. நியூசிலாந்து தொடருக்கு பின் இந்திய அணி புத்துயிர் பெறுமா?

இந்தூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முக்கிய ஆட்டத்தில், 338 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் சொந்த மண்ணில் தொடரை இழந்து இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அனுபவம் குறைந்த நியூசிலாந்தின் ‘பி’ அணிக்கு எதிராக இந்திய அணி சரணடைந்தது கிரிக்கெட் விமர்சகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தோல்வி இந்திய அணியின் எதிர்காலம் குறித்த பல தர்மசங்கடமான கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, 36 வயதை கடந்த மூத்த வீரர்களின் பங்களிப்பு குறித்து விவாதங்கள் தொடங்கியுள்ளன. ரோகித் சர்மா நல்ல தொடக்கம் கொடுத்தும் அதனை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறியது ஒருபுறமிருக்க, ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடு கவலையளிக்கும் விதமாக உள்ளது.

இந்த தொடர் முழுவதும் அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை; இது 2017-க்கு பிறகு நிகழ்ந்த மோசமான சாதனையாகும். மேலும், அவரது பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கிலும் தடுமாற்றம் தெரிவதால், ஜடேஜாவின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்கள் வரிசையில் காத்திருப்பதால், 2027 உலக கோப்பையைக் கருத்தில் கொண்டு அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. நியூசிலாந்து அணி மீண்டும் ஒருமுறை இந்திய அணியின் பலவீனங்களை அம்பலப்படுத்தி சென்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்