இந்தியா

ஆளுநர் உரையாற்றும் முறையையே முற்றிலுமாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை படிக்காமல் பாதியிலேயே வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தில், உரையை தொடங்குமாறு பேரவைத் தலைவர் அப்பாவு கோரிக்கை விடுத்தார். ஆனால், தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்ற காரணத்தை கூறி ஆளுநர் உரையை வாசிக்க மறுத்து அவையை விட்டு வெளியேறினார். ஆளுநரின் இந்த செயல் சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கும் செயல் என ஆளுங்கட்சி தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஆளுநர் வெளியேறியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவை விதி 17-ன் கீழ் ஒரு முக்கிய தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் சென்றதை ஏற்க முடியாது என்றும், கணினியில் பதிவேற்றப்பட்ட உரையின் ஆங்கிலம் மற்றும் தமிழாக்கம் அவையில் முறைப்படி படிக்கப்பட்டதாகவே கருதப்படும் என்றும் அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஆளுநர் உரையாற்றும் முறையையே முற்றிலுமாக நீக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்த போவதாகவும் முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்