பொங்கலுக்கு ரிலீஸாகி மக்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் பராசக்தி. வரலாற்று சிறப்புமிக்க ஒரு சம்பவத்தை துணிந்து எடுத்து அதை படமாக கொண்டு வருவது என்பது மிகப்பெரிய விஷயம். அப்படி சுதா கொங்கரா இந்தப் படத்தை கொடுத்ததற்கே மிகப்பெரிய சல்யூட் கொடுக்க வேண்டும். ஆனால், நம்முடைய ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு படம் என்றால் அதில் ஆக்ஷன் வேண்டும், மாஸ் வேண்டும், திரும்புனா கைத்தட்டணும், நின்னா கைத்தட்டணும். அப்படி ஒரு சீன் படத்துல இருக்கணும்னுதான் நினைக்கிறார்கள்.
அதற்கான படமே கிடையாது பராசக்தி. இந்தப் படம் நம்மை யோசிக்க வைக்கும். தமிழனா பிறந்து என்ன பண்ணோம்னு நினைக்க வைக்கும். தமிழனா இருக்க இவ்ளோ பாடுபட வேண்டுமா என சிந்திக்க வைக்கும். நமக்கு முன்னாடி இவ்ளோ பேர் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் போராடி இறந்திருக்கிறார்களா என்று அழ வைக்கும்.
அதனால் பராசக்தி படம் சில பேரை நல்ல முறையில் சென்றடைந்தது. சில பேருக்கு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் பராசக்தி படத்தை பார்த்துவிட்டு ரஜினி விடியற்காலையிலேயே படத்தின் இயக்குனரான சுதா கொங்கராவுக்கு தொலை பேசி வாயிலாக அழைத்து வாழ்த்துக்களை கூறினாராம். படம் சூப்பராக இருக்கிறது.
இப்படியொரு படத்தை எடுக்க தைரியம் வேண்டும். நல்ல முறையில் வந்திருக்கிறது என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் , ‘ஆமா எனக்காக ஏதோ லவ் ஸ்டோரி வச்சிருக்கீயாமே’ என கேட்டாராம். முன்பு ஒரு பேட்டியில் சுதா கொங்கரா ரஜினி சாருக்காக ஒரு காதல் கதை தன்னிடம் இருக்கிறது என்று கூறியிருந்தார். அதை மனதில் வைத்துதான் ரஜினி அப்படி கேட்டதாக சுதா கொங்கரா கூறினார்.

