கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள மார்க்கம் பகுதியைச் சேர்ந்த 54 வயதான லூய்கி காங் என்பவர், ஒருவரைத் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் நீச்சல் பயிற்சி பெறும் இடத்திற்குப் பல மாதங்களாக இவர் தொடர்ந்து வந்துள்ளதாக யோர்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 12 ஆம் தேதி, பான் ஆம் மையத்தில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டது. அந்த நபர் பாதிக்கப்பட்டவரின் பெயரைச் சொல்லித் தொடர்ந்து கூச்சலிட்டவாறே பயிற்சி மையத்தின் வாசல் வரை பின்தொடர்ந்துள்ளார். பின்னர் மையத்தின் உள்ளே அமர்ந்து கண்காணித்த அவரை ஊழியர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தி காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
விசாரணையில் அந்த நபர் பல மாதங்களாக நீச்சல் பயிற்சிகளில் கலந்து கொண்டு கண்காணித்தது தெரியவந்தது. தற்போது அவர் மீது குற்றவியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதோடு, இது தொடர்பாகத் தகவல் அறிந்த சாட்சிகள் முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

