சினிமா

மூன்று குரங்குகள் கதை தெரியுமா? நயன்தாராவுடன் நட்பான பகையாளிகள்

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு உச்ச நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பிற மொழிகளிலும் தன்னுடைய ஆளுமையை செலுத்தி வருகிறார். கடந்த வருடம்தான் பாலிவுட்டில் நுழைந்த நயன் முதல் படத்திலேயே ஷாருக்கானுடன் இணைந்து நடித்தார்.

அதுவும் ஒரு ஆக்‌ஷன் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டினார். அங்கு மட்டும் அவர் மாஸ் காட்டவில்லை. எப்போது பாலிவுட்டில் நுழைந்தாரோ அப்போதே எல்லா மொழிகளிலும் கொஞ்சம் கெத்தும் காட்ட ஆரம்பித்தார். அதிலிருந்தே அவருடைய பேச்சு, நடவடிக்கை என எல்லாவற்றிலும் கொஞ்சம் வித்தியாசம் காணப்பட்டது.

சரி. தன்னுடைய துறையில் பெரிய ஆளாக இருக்கிறோம் என்றால் வழக்கமாக எல்லாருக்கும் வருவதுதானே அந்த பெருமை. அப்படித்தான் என ரசிகர்களும் கடந்துவிட்டனர். ஆனால் திடீரென அவர் கொடுத்த ஒரு பேட்டி பூதாகரமாக கிளம்பியது. வலைப்பேச்சு சேனலில் பேசிக் கொண்டிருக்கும் பிஸ்மி, அந்தணன், சக்திவேல் இவர்களை பற்றி மறைமுகமாக மூன்று குரங்குகள் என கூறியிருந்தார்.

அதெப்படி அவர் அப்படி சொல்லலாம். பாடி ஷேமிங் செய்வது அவரை பொறுத்தவரைக்கும் நல்லதா என்று வலைப்பேச்சிலேயே அந்த மூன்று பேர் குரல் எழுப்பினர். அதாவது 50 வாரங்களில் 48 வாரங்கள் என்னை பற்றி பேசியே அவர்கள் சம்பாதிக்கிறார்கள் என நயன்தாரா கூறினார். ஆனால் பெரும்பாலும் நாங்கள் அவரை பற்றி பேசுவதே இல்லை என்று வலைப்பேச்சு தரப்பில் கூறப்பட்டது. அந்த பேட்டியை பார்க்கையில் நயந்தாராவை பொறுத்தவரை இவர்கள் மூன்றுபேரும் பகையாளிகள்.

இப்படி நிலைமை போய்க் கொண்டிருக்க திடீரென பிஸ்மி, அந்தணன், சக்திவேல் ஆகிய மூவரும் நயன் தாராவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை தங்களுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் பிஸ்மி. சமீபத்தில் நயனை துபாயில் சந்தித்த இவர்கள் இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்