2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
யாரும் எதிர்பாராத விதமாக, நட்சத்திர வீரர் பாபர் அசாம் அணியில் நீடித்தாலும், சல்மான் அலி ஆகா அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் ஷாகீன் அப்ரிடி, சாய்ம் அயூப் போன்ற முன்னணி வீரர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியா, அமெரிக்கா, நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பிப்ரவரி 7-ஆம் தேதி கொழும்பில் நடைபெறும் தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. குறிப்பாக, பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் மோதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
வங்கதேசத்தை நீக்கியதால் உலகக்கோப்பையை தவிர்ப்போம் என பாகிஸ்தான் ஒருபக்கம் கூறிவிட்டு, இன்னொரு பக்கம் அணியை அறிவித்துள்ளது முரண்பாட்டின் மொத்த உருவமாக பார்க்கப்படுகிறது.

