இந்தியா

ஓபிஎஸ் அணியின் கூண்டோடு காலி.. தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர்…!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ் அணியின் முக்கிய தூணாக விளங்கியவருமான கு.ப.கிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் அதிமுகவின் நிறுவனத் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டு தான் மிகுந்த வேதனையடைந்ததாக அவர் தெரிவித்தார்.

தனது இணைப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு மாபெரும் இயக்கத்தை வளர்த்தெடுத்த தலைவர்களை மேடையில் மதிக்காத இடத்தில் எதற்கு இருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்ற அவர், “அரசியல் களத்தில் மாற்றத்தை கொண்டு வர ஒரு இளைஞர் இன்று புறப்பட்டிருக்கிறார். அவரின் முயற்சி வெல்ல வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் என்னையும் நான் இணைத்து கொண்டேன்” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார்.

அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் தற்போது விஜய்யின் தலைமையிலான த.வெ.க-வை நோக்கி நகர்வது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்