கூலி படத்திற்கு பின் ரஜினி, கமல் இருவரும் பல வருடங்களுக்கு பின் இணைந்து நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் து டேக்ஆப் ஆகவில்லை.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் விளக்கமளித்த லோகேஷ் கனகராஜ் ‘கூலி படத்தை முடித்துவிட்டு கைதி 2 படத்தை பண்ணலாம் என்று ஐடியாவில் இருந்தேன்.. ஆனால் கூலி பட ரிலீஸ் சமயத்தில் கமல் சார் மற்றும் ரஜினி சார் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள். இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்பதால் ரஜினி கமல் படத்தை முடித்துவிட்டு பிறகு கைதி 2 படத்தை எடுக்கிறேன் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறிவிட்டு இவர்களுக்காக ஒரு கதையை தயார் செய்தேன்.
ஆனால் இருவரும் தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து வருவதால் ஒரு லைட்ஹார்ட்டட் கதையை எதிர்பார்த்தார்கள்.. அந்த மாதிரியான படம் எனக்கு பண்ண வராது என்பதால் அது அவர்களிடம் சொல்லிவிட்டு வந்து விட்டேன்.. அதற்குள் நான் ரஜினி – கமல் படத்தை முடித்து விட்டு வர தாமதமாகும் என்று நினைத்த தயாரிப்பு நிறுவனம் கைதி 2 படத்துக்காக வைத்திருந்த ஸ்லாட்டை வேறு இயக்குனருக்கு கொடுத்து விட்டார்கள்.. இதுதான் நடந்தது’ என்று கூறினார்.
மேலும் அடுத்து அல்லு அர்ஜுன் படத்தை இயக்கப் போகிறேன்.. அதை முடித்துவிட்டு கைதி 2 படத்தை இயக்குவேன்’ என தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

