தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அவர்களின் கணிப்பு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டால், அவர் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு 10 முதல் 12 சதவீத வாக்குகள் வரை மட்டுமே செல்வாக்கு இருப்பதாக கணக்கிடும் ஷ்யாம், இந்த வாக்கு விகிதத்தை கொண்டு எந்த தொகுதியிலும் வெற்றியை ஈட்டவோ அல்லது டெபாசிட்டை தக்கவைக்கவோ முடியாது என விளக்குகிறார்.
சினிமா செல்வாக்கு என்பது தனிப்பட்ட புகழைக் கொடுக்குமே தவிர, அது பூத் கமிட்டி போன்ற வலுவான கட்டமைப்பு இல்லாதபோது வாக்குகளாக மாறாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

