சினிமா

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு

90-களில் தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சங்கவி, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் தடம் பதிக்கவுள்ளார்.

‘அமராவதி’ படத்தின் மூலம் அஜித்திற்கு ஜோடியாக அறிமுகமான இவர், தளபதி விஜய்யுடன் ‘ரசிகன்’, ‘விஷ்ணு’, ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ மற்றும் ‘நிலாவே வா’ என நான்கு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர்.

தற்போது சங்கவி, ‘பாளையத்தம்மன்’ என்ற புதிய தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தொடரில் அவர் ஒரு தீவிரமான ஆன்மீக பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் கேமரா முன்னால் தோன்றுவது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, வழக்கமான குடும்ப பாங்கான வேடங்களை தவிர்த்து, ஒரு ஆன்மீக மேக்கப்பில் சங்கவியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். வெள்ளித்திரையில் அசத்திய சங்கவி, தற்போது சின்னத்திரையிலும் தனது முத்திரையை மீண்டும் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்