இந்தியா

அதிமுக – பாஜக ஆட்சி அமைந்தால் தமிழ்நாடு நாசமாகி போகும்!.. மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

தமிழகத்தில் 2011 முதல் 2021 வரை இரண்டு முறையும் அதிமுகவை வெற்றி பெற்று ஆட்சியில் இருந்தது. அந்த இரண்டு ஆட்சியிலும் திமுக எதிர்க்கட்சியாக மட்டுமே செயல்பட்டது.

அதே நேரம் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வர் பதவியில் அமர்ந்தார். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைக்க பல வியூகங்களை மு.க ஸ்டாலின் செய்து வருகிறார்.

ஏற்கனவே அதிமுக பாஜகவுடன் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்கிறது.. அந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன், அன்புமணி தலைமையிலான பாமக, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்திருக்கின்றன. ஒருபக்கம் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை, மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவிருக்கிறது..

இந்நிலையில் கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய அவர் ‘இஸ்லாமியர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி துரோகங்களை செய்தார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக போராடியது.. ஆனால், அதிமுக ஆதரித்ததால் அது சட்டமானது. பழனிசாமிக்கு தெரிந்ததெல்லாம் காலில் விழுவது, காலை வாருவது மட்டும்தான்..

வரும் தேர்தல் மோடிக்கு எதிரானதும்தான்.. அதிமுக பாஜக ஆட்சி அமைந்தால் தமிழகம் நாசமாகும்’ என அவர் பேசியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்