சினிமா

இப்பதான் தெரியுது.. ஏன் விஜய் அமைதியா இருக்காருனு? ஜனநாயகனில் திடீர் திருப்பம்

சொன்ன தேதியில் மட்டும் ஜன நாயகன் படம் ரிலீஸாகியிருந்தால் இந்நேரம் வசூலில் பெரும் சாதனையை அடைந்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம். ரிப்பீட்டடு ஆடியன்ஸும் படத்தை மாறி மாறி பார்த்திருப்பார்கள். ஒரு வழியாக பொங்கலை விஜய் ரசிகர்கள் உட்பட அனைவரும் வேற லெவலில் கொண்டு போயிருப்பார்கள். ஆனால் நடந்ததே வேறு. எப்போதும் விஜய் படத்திற்கு பிரச்சினை வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் ஜன நாயகனுக்கு நடந்த பிரச்சினையோ வரலாற்றில் பொரிக்க கூடியதாகவே மாறிவிட்டது. சுப்ரீம் கோர்ட் , ஹை கோர்ட் என மாறி மாறி இந்த பிரச்சினையை கொண்டு போய் ஒரு வழியாக மீண்டும் ஆரம்பத்தில் இருந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். இதற்கிடையில் ஜன நாயகன் படத்தின் தயாரிப்பாளர் ஒரு முடிவை எடுத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த வழக்கை வாபஸ் வாங்குவதாக தயாரிப்பாளர் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதனால் கூடிய சீக்கிரம் மீண்டும் சென்சார் சென்று அதுவும் செட்டாகவில்லை என்றால் ரிவைசிங் கமிட்டிக்கு சென்று படத்தின் ரிலீஸ் தேதியில் ஒரு முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரூல்ஸ் படி ரிவைசிங் கமிட்டிக்கு சென்றால் எப்படியும் 20 நாள்கள் ஆகும் என்றுதான் சொல்கிறார்கள்.

ஆனால் இந்த பிரச்சினை மேலும் மேலும் இழுக்காமல் தயாரிப்பாளர் அவரது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். இந்த நிலையில் ரிவைசிங் கமிட்டி செல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு போட சொன்னதே விஜய்தான் என்று இப்போது தகவல் வெளியாகியிருக்கிறது. ஆரம்பத்தில் சென்சார் சொன்ன மாற்றங்களை செய்தும் சான்றிதழ் கொடுக்காமல் இருந்த சென்சாருக்கு எதிராக பட நிறுவனம் ரிவைசிங் கமிட்டி சென்றிருந்தால் இந்த பிரச்சினை சுமூகமாக போயிருக்கும்.

ஆனால் ரிவைசிங் கமிட்டி போனால் இன்னும் தாமதமாகும் என்று நீதிமன்றத்தில் வழக்கு போட சொன்னதே விஜய் தான் என்று இப்போது சொல்கிறார்கள். படத்தை சுற்றி இவ்வளவு பிரச்சினை நடந்தும் வாய் திறக்கவே இல்லையே விஜய் என்று பலரும் விமர்சனத்தை முன்வைத்தனர். ஆனால் அதற்கு தானும் ஒரு காரணம் என்று நினைத்து கூட விஜய் அமைதியாக இருந்திருப்பார். இதற்கிடையில் கேரளா வினியோகஸ்தர் ஒருவர் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாகவும் அதை பட நிறுவனம் தந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்